


பின் வாசல் கதவைத் திறந்தவுடன் துவைக்கும் கல் அருகில் சின்னதாக பாம்பு ஒன்று இருந்தது. அது மிகவும் குட்டியாக இருந்ததால் அது குட்டிப் பாம்பா அல்லது அந்தப் பாம்பு வகையே சின்னதாக இருக்குமா என்று தெரியவில்லை. படம் எடுப்பது போல தலையை வேறு தூக்கியது. ஏதேனும்
விஷப்பாம்புக் குட்டியாக இருக்குமோ என்று யோசித்தாலும் மிக அழகாக இருந்ததால் சுசியைக் கூப்பிட்டேன். "கொஞ்ச நேரம் பார்த்துக்கோ (?? "வடகமா காயப்போட்டுருக்க பாத்துக்கிறதுக்கு" னு அவளும் திட்டாமல் "ஐ அழகா இருக்கு எப்படிக் கண்டுபிடிச்ச?" எனக் கேட்டு விட்டு சிரத்தையுடன் அதற்கருகில் குனிந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்) வரேன் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடினேன். ஒரு பெரிய ஜாரையும் அதை மூடுவதற்கு எதற்கும் இருக்கட்டும் என ஒரு வலைத் துணியையும் எடுத்துக் கொண்டு வந்தேன். வெகு சுலபமாக ஜாருக்குள் போட்டு வலைத் துணியால் ஜாரின் வாயை மூடி விட்டோம். கொஞ்சம் ஸ்நாக்ஸ் ஆக எறும்பு சிலந்தி எனப் போட்டு வைத்தோம். அப்புறம் அன்று மாலை வரை வைத்திருந்து அது என்ன வகைப் பாம்பு என்றெல்லாம் கூகிளில் அலசி ஆராய்ந்துவிட்டு நிலா நித்திலா பள்ளியில் இருந்து வந்தபின் அவர்களும் பெருமையாகப் புகைப்படங்கள் எல்லாம் எடுத்து ஆராய்ச்சி செய்த பின் வெளியே கொண்டு போய் விட்டு விட்டோம். சந்தோஷமாக ஓடிவிட்டது.
நந்தா



